இந்தியா

அதிரடி தாக்குதல்: 25 நாடுகளுக்கு மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கர் தகவல் தெரிவித்தார்.

காஷ்மீர் மற்றும் இதர இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதால் அந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் எடுத் துரைத்தார்.

இதுபோன்று மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், அதேநேரம் தீவிரவாதி கள் தாக்குதல் நடத்துவதை பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர்களிடம் கூறி னார்” என்றார்.

SCROLL FOR NEXT