இந்தியா

பிரதமரின் ஆய்வகத்தில் புதிய பரிசோதனை: அக்னிபாதை திட்டம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் வீரர்கள் ஓய்வு பெறு கின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது. இந்நிலையில் 4 ஆண்டு கால ஒப்பந்தத்துக்கு பிறகு ஓய்வுபெறும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்களின் எதிர்காலம் என்ன?

பிரதமரின் ஆய்வகத்தில் இந்தப் புதிய பரிசோதனையால் நாட்டின் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டும் ஆபத்தில் உள்ளன. இவ்வாறு ராகுல் காந்திகூறியுள்ளார்.

நாட்டின் முப்படைகளில் 17.5வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு பணிக்கு அமர்த்தும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT