இந்தியா

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதான்கோட்டில் மர்ம நபர்கள் ஊடுருவல்: இரவு பகலாக தேடுதல் வேட்டை

ஐஏஎன்எஸ்

பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில், கடந்த ஜனவரி 2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் 4 பேர் நடமாடுவதாக, பாது காப்புப் படையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் அளித்தனர்.

இதையடுத்து பதான்கோட் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு பகலாக மர்ம நபர் களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பதான்கோட் மாவட்ட போலீஸ் கண்காணிப் பாளர் ராகேஷ் கவுசல் நேற்று கூறும்போது, ‘‘சக்கி நதிக்கரையோர பகுதிகளில் இரவு முழுவதும் மர்ம நபர் களைத் தேடினோம்.

இதுவரை சந்தேகப்படும் படி எதுவும் காணப்பட வில்லை. எனினும் தேடுதல் வேட்டை தொடர்கிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT