கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட வழக்கில், குற்றம்சாட்டப் பட்ட கடற்படை வீரர் மஸிமிலி யானோ லத்தோர் இத்தாலியிலேயே தங்கியிருக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடல்பகுதியில் இரு இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இவ்வழக்கில் சல்வடோர் கிரோன், லத்தோர் ஆகிய இரு இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
சல்வடோர் மருத்துவக் காரணங் களுக்காக இத்தாலி அனுப்பி வைக் கப்பட்டார். பின்னர், லத்தோரும் அனுப்பி வைக்கப்பட்டார். இத னிடையே, கடல் பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தை விசாரிக்கும் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து இத்தாலி தரப்பில் சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட லத்தோர், தான் தொடர்ந்து இத்தாலியிலேய தங்கியிருக்க அனுமதி கோரினார்.
இம்மனுவை நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு விசாரித் தது. மத்திய அரசு லத்தோரின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வில்லை. ஆனால், கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.என். பாலகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், “சர்வதேச தீர்ப்பாய தீர்ப்பு 2020ல் கூட வரலாம். மனுதாரர் தரப்பு வழக்கை இழுத்தடிக்க திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்” எனக் கூறப்பட்டது.
எனினும், லத்தோர் இத்தாலி யிலேயே தங்கியிருக்கலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதேசமயம் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு கடற்படை வீரர் சல்வ டோருக்கு விதிக்கப்பட்ட நிபந் தனைகள் லத்தோருக்கும் பொருந் தும் என நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.