பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சூரில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அந்த கட்சித் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மதச்சார்பின்மை, சமூக நல்லி ணக்கத்துக்கு கேரளா முன்னுதார ணமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராக போரிட்டு வெல்ல வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. எனவே மீண்டும் காங்கிரஸுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் சுமார் 200 அரசியல் படுகொலைகள் நடைபெற் றுள்ளன. இவை அனைத்துக்கும் பாஜகவும் இடதுசாரி கட்சிகளும் காரணம். கேரளாவில் நிலவும் அமைதிக்கு பாஜகவும் பிரதமர் மோடியும் மிகப்பெரிய அச்சுறுத்த லாக உள்ளனர்.வளர்ச்சி என்ற பெயரில் பிரதமர் மோடி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். அதற்கு மக்கள் இடம் அளிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.