ஜூன் மாதத்தில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்கள் பெற்று திருப்பதி ஏழு மலையானை தரிசனம் செய்ய வசதியாக 49,046 டிக்கெட்கள் விநி யோகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பக்தர்களுக்கு வழங்கும் சேவை களை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதம் சுவாமியின் ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக 49,046 டிக் கெட்கள் தற்போது ஆன்லைனில் வைக்கப்பட்டுள்ளன. சுவாமிக்கு துலாபாரம் செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். தற் போது பக்தர்களுக்காக திருமலை யில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.