நம்பகத்தன்மை இல்லாத ஆதாரங்களின் அடிப்படையில் தன் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டெல்லி நீதிமன்றத்தில் வாதாடினார்.
2ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்றுத் தந்ததற்கான லஞ்சப் பணம் ரூ. 200 கோடியை கலைஞர் டி.வி.க்கு டி.பி. குழுமம் வழங்கியதாகவும், இந்த பணப் பரிவர்த்தனையில் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 19 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கனிமொழி சார்பில் அவரின் வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கனிமொழிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு களை மறுத்தும், அவருக்கு ஜாமீன் கோரியும் ரெபேக்கா ஜான் நீதிமன்றத்தில் கூறியதாவது: “கலைஞர் டி.வி.க்கு டி.பி. குழுமத் தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.200 கோடிக்கும் கனிமொழிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக நம்பகத்தன்மை இல் லாத ஆதாரங்களின் அடிப்படை யில் கனிமொழி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கனிமொழி மீது குற்றம் சாட்டும் அளவுக்கு தகுந்த ஆதாரங்களோ, போதிய முகாந்திரமோ இல்லை.” என்றார்.