கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவாக குணம் பெற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பக்கத் தில், “ராகுல் காந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி அறிந்து பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் கவலை தெரிவித்தார். பிரதமரின் கவலை கருதி, ராகுல்காந்தியின் உடல்நிலை குறித்து நான் விசாரித்தேன். ராகுல் விரைவில் நலம்பெற பிரதமர் சார்பில் வாழ்த்தும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவரை நன்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.