இந்தியா

சோனியா பற்றிய மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் காங். கடும் அமளி - மக்களவையில் வெளிநடப்பு, மாநிலங்களவை ஒத்திவைப்பு

பிடிஐ

கேரளாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தில் பேசிய பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் ஊழலில் காங் கிரஸ் தலைவருக்கு (பெயரை குறிப்பிடவில்லை) தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கூறவில்லை, மாறாக இத்தாலி நீதிமன்றமே கூறியுள்ளது.

இந்த சூழ்நிலையில் வார விடுமுறைக்குப் பிறகு மக்களவை நேற்று காலையில் கூடியதும், சோனியா காந்தி குறித்த பிரதமர் மோடியின் கருத்து குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங் கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலி யுறுத்தினார். பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் கார்கே தெரிவித்தார்.

ஆனால் சுமித்ரா மகாஜன் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து வலியுறுத்தியபோதும் தங்க ளுடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததையடுத்து, பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில்

மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) குலாம் நபி ஆசாத் இந்தப் பிரச்சினை குறித்து பேசும்போது, “ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக கடந்த வாரம் நடந்த விவாதத்தின்போது யாரும் காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பித்த பாதுகாப்பு அமைச்சர் கூட யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் மோடி இவ்வாறு பேசியிருப்பது காங்கிரஸ் தலைவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரினர். அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால், பூஜ்ஜிய நேரத்தின்போது 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் நன்பகல் 12 மணிக்கு அவை கூடியபோது, கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு உறுப்பினர் களுக்கு அவைத்தலைவர் அன்சாரி கோரிக்கை வைத்தார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டனர்.

SCROLL FOR NEXT