காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் நேற்று 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம் டிரக்முல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி யிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீஸார் இணைந்து அந்தப் பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர்.
பாதுகாப்புப் படையினரின் பிடியில் இருந்து தப்பிக்க தீவி ரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி யால் சுட்டு கையெறி குண்டுகளை வீசினர். இருதரப்பினருக்கும் கடும் சண்டை நடைபெற்றது. இறுதி யில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் 2 வீரர்கள் படு காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ பகுதியில் இருந்து துப்பாக்கி உட்பட ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.