இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காவல் நீட்டிப்பு

ஏஎன்ஐ

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனை வருக்கும் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக் கப்பட்டுள்ளது.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த இவ் வழக்கில், கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனு மீது பதிலளிக்க சிபிஐ தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கு வரும் ஜூன் 6-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜியின் கார் ஓட்டுந ரான ஷ்யாம்வர் ராய், கடந்த 11-ம் தேதி மும்பை நீதிமன்றத்தில் அப்ரூவராக மாறுவதாக விருப்பம் தெரிவித்தார். இதற்காக தனக்கு நெருக்கடி ஏதும் அளிக்கப்பட வில்லை எனவும் அவர் நீதிமன்றத் தில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் இந்திராணி, அவரது கணவர் பீட்டர், ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர். இவர்களுக்கு வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT