இந்தியா

மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மதக் கலவரத்தை தூண்ட தாவூத் சதி: என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தி நாடு முழுவதும் மதக் கலவரத்தை தூண்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சதித் திட்டம் தீட்டியிருக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

குஜராத்தில் கடந்த 2015, நவம்பர் 2-ல் இந்து அமைப்பை சேர்ந்த ஷிரிஷ் பன்காலி மற்றும் பிரக்நேஷ் மிஸ்திரி இருவரையும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் சுட்டுக் கொன்றனர். குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தியதில் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு பழித் தீர்க்கவே இந்த கொலை சம்பவத்தை நடத்தியதாக தெரி வித்திருந்தனர்.

எனினும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், கைதான தாவூத் இப்ராஹமின் ஆட்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு அவப் பெயர் ஏற் படுத்தும் வகையில் இந்து உள் ளிட்ட அனைத்து மதத் தலைவர் கள் மற்றும் சர்ச்சுகள் மீது தாக்கு தல் நடத்தி நாட்டில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை தூண்ட சதித் திட்டம் தீ்ட்டியிருக் கும் தகவல் தெரியவந்தது. இதற் காக பாகிஸ்தானை சேர்ந்த ஜாவேத் சிக்னா, தென் ஆப்பிரிக் காவின் ஜஹித் மியான் என்கிற ஜாவோ இருவரையும் தாவூத் இப்ராஹிமின் ‘டி-கம்பெனி’ களம் இறக்கியிருப்பதும் கண்டறியப் பட்டது.

மேலும் தாக்குதல் நடத்துவதற் காக பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர் களின் பெயர் பட்டியலையும் அவர்கள் தயாரித்து வைத்திருப் பதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT