இந்தியா

காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் பலியானார்

பிடிஐ

வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் நேற்று நடந்த இரு மோதல் சம்பவங்களில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

பாரமுல்லா மாவட்டம், தங்மார்க் பகுதியில் உள்ள கொஞ்சிபோரா என்ற கிராமத்தில் 2 தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்ப தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பிலும் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இந்நிலையில் பிற்பகலில் அந்த வீட்டை பாது காப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.

இதைத் தொடர்ந்து இடிபாடுக ளில் இருந்து 2 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

மற்றொரு மோதல் சம்பவம், குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி யில் நடந்தது. நவ்காம் செக்டார், தூர்மார்காலி வனப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிரவாதி கள் இடையே நேற்று முன்தினம் தொடங்கிய மோதல் நேற்று முடிவுக்கு வந்தது.

இதில் 4 தீவிரவாதிகள் கொல் லப்பட்டனர். 36 வயது ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந் தார். ஹவல்தார் ஹாங்பாங் தாடா என்ற இந்த வீரர், அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்தவர். இவ ருக்கு மனைவியும் 11 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.

தூர்மார்காலி வனப் பகுதியில் சண்டை முடிவுக்கு வந்தாலும் தீவிரவாதிகளை தேடும் பணி நடை பெறுகிறது. பாகிஸ்தானில் இருந்து இத்தீவிரவாதிகள் அண்மையில் இங்கு ஊடுருவியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT