பாலியல் பலாத்கார வழக்கில், ஆர்.கே.பச்சோரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட டெல்லி நீதிமன்றம், வரும் ஜூலை 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் முன்னாள் தலை வரான பச்சோரி, உடன் பணி யாற்றிய பெண் ஆராய்ச்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பச்சோரிக்கு எதிராக கடந்தாண்டு பிப் ரவரி 13-ம் தேதி வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், 1,400 பக்க குற்றப்பத்திரி கையையும் தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த டெல்லி பெருநகர மாஜிஸ் திரேட் நீதிபதி ஷிவானி சவுஹான், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-ஏ, 354-பி, 354- டி, 509 மற்றும் 341 ஆகிய பிரிவுகளின் கீழ், பச்சோரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன’ எனக் கூறி, ஜூலை 11-ம் தேதி பச்சோரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள, நிறுவன அதிகாரிகள் 23 பேர் அளித்த சாட்சி யங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பச்சோரி அனுப்பிய எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் போன்றவை, பச்சோரிக்கு எதிரான வலுவான சாட்சியங்களாக உள்ளதா கவும் நீதிபதி ஷிவானி குறிப்பிட்டார்.