இந்தியா

டெல்லியிலிருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியிலிருந்து மும்பை வழியாக துபாய்க்கு நேற்று மதியம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது.

இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பின் விமானத்தை சோதனை செய்தபோது, எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என தெரிந்தது. இதையடுத்து மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்பட்டு அதில் பயணிகள் துபாய் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்றொரு விமானத்திலும் கோளாறு

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் க்யூ-400 ரக விமானம் குஜராத்தின் கண்ட்லா நகரிலிருந்து நேற்று மும்பை புறப்பட்டது. விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இறக்கையில் உள்ள காற்று தடுப்பான் தகட்டில் விரிசல் விழுந்தது. இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT