இந்தியா

லாலு பிரசாத் யாதவுக்கு தோள்பட்டை எலும்பு முறிவு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் தலைநகர் பாட்னாவில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மாடிப்படியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவும் முதுகில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாட்னா தனியார் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை லாலு பிரசாத் யாதவ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT