மணிப்பூர் மாநிலம் நோனே மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் புதிதாக கட்டப்பட்டு வரும் துபுல் ரயில் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப்பணி நடைபெறுகிறது.படம்: பிடிஐ 
இந்தியா

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபம் மற்றும் இம்பால் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

நோனே மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, 107 டெரிடோரியல் ஆர்மி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

ராணுவ முகாம் மீது மண் சரிந்ததில் வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் அறிந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநில முதல்வர் பிரேன் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT