கேரளாவில் நடைபெற்ற சோலார் பேனல் ஊழல் தொடர்பாக நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சரிதா நாயர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட் டுள்ளார். இவரிடம் ஆணையம் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளது.
இவர், ஆணையம் முன்பு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஆணையம் நேற்று நிராகரித்துவிட்டது. அத்துடன் வரும் ஜூன் 6-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.