இந்தியா

முசாபர்நகர் கலவரம்: டெல்லி காவல்துறை அதிகாரிக்கும் வன்முறையில் தொடர்பு

செய்திப்பிரிவு

முசாபர்நகர் கலவரத்தில் டெல்லியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் ஈடுப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் நடந்த கலவரத்தின்போது, புகானா மற்றும் பவாதி கிராமங்களில் அத்துமீறல்கள் நடைபெற்றது. அந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட ஆய்வில், டெல்லியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் வன்முறையில் ஈடுப்பட்டது அம்பலமாகி உள்ளது.

இது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் கூறுகையில், முசாபர் நகர் கலவர்ம் தொடர்பாக தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையில் டெல்லியை சேர்ந்த காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கலவரத்தில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. காவல்தூறை அதிகாரி கலவரத்தில் திருட்டு, வன்முறைகளில் ஈடுப்பட்டது அம்பலமாகி உள்ள நிலையில், இதில் இவரது பங்கு என்ன? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தின்போது, இருத்தரப்பும் வன்முறையில் ஈடுப்பட்ட போது சில பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், திருட்டு, கொலை என பல்வேறு நாச வேலைகளால் முசாபர் நகரில் அமைதி சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT