அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பான விவரங் களை வழங்க உத்தரவிடக் கோரி ஆர்டிஐ ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிஐசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் ஆணையர் திவ்ய பிரகாஷ் சின்ஹா கூறியதாவது:
வாங்கப்பட்ட ஹெலிகாப்டர் களை திருப்பித் தருவது தொடர் பாக, மத்திய அரசுக்கு அட்டர்னி ஜெனரல் வழங்கிய கருத்து மற்றும் இது தொடர்பான இத்தாலி நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர் பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தர விட்டுள்ளோம்.
மேலும் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த விவரங்களை தகவல் பெறும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் வழங்கலாமா அல்லது இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.