இந்தியா

கேரளாவில் 100-வது பிறந்த நாளில் வாக்காளர் அட்டை பெற்ற மூதாட்டி

செய்திப்பிரிவு

கேரளாவில் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட் டிக்கு, வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் பரிசாக வழங்கினார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது பெரவூர் சட்டப்பேரவைத் தொகுதி. இத் தொகுதிக்கு உட்பட்ட கோலக் காட் கிராமத்தைச் சேர்ந்தவர் திரிசம்மா சாக்கோ. 100 வயது நிரம்பிய திரிசம்மாவின் வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை சென்ற மாவட்ட ஆட்சியர் பி.பாலகிரண் வாக்காளர் அடையாள அட் டையை திரிசம்மாவிடம் வழங்கினார். அதை பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைந்தார் திரிசம்மா.

பின்னர், கேரளாவில் வரும் 16-ம் தேதி நடக்கும் தேர்தலில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப் பது என்று அவருக்கு ஆட்சியர் கற்றுக் கொடுத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் பாலகிரண் கூறுகையில், ‘‘தேர்த லில் வாக்களிப்பது கடமை என் பதற்கு மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக திரிசம்மா இருக்கிறார். அவருடைய 100வது பிறந்த நாள் பரிசாக வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினேன்’’ என்றார். பின்னர் திரிசம்மா பிறந்த நாளுக்காக, அவரது வீட்டில் கேக் வெட்டினார் பாலகிரண்.

கண்ணூர் மாவட்டத்தில் 100 வயதை கடந்த 163 பேர் வசிக்கின்றனர். இவர்களில் திரிசம்மா மட்டும்தான் இதுவரை வாக்களித்ததில்லை. அந்த குறை இப்போது நீங்கி விட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் அவர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளார்.

கடந்த 1969-ம் ஆண்டு திருச்சூரில் இருந்து தனது கணவர் சாக்கோவுடன் இந்த பகுதிக்கு குடியேறி உள்ளார் திரிசம்மா.

எனினும், வாக்களிக்காமல் இருப்பது குறித்து மனம் வருந்தி உள்ளார். அதன்பிறகு அவரது உறவினர்கள் உள்ளூரில் உள்ள அக் ஷயா மையத்துக்கு திரிசம்மாவை அழைத்து சென்று வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT