இந்தியா

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங். கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் தகவல்

செய்திப்பிரிவு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வரும் 16-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலை மையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகள் களத்தில் உள்ளன. இதில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மார்ஸ் மற்றும் புஷ் ஏஜென்ஸி ஆகியவை இணைந்து தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தியுள்ளன.

அதில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 69 முதல் 73 தொகுதி களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 65 முதல் 69 இடங்களைக் கைப்பற்றக் கூடும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகளும் இடதுசாரி கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகளும் இதர கட்சிகளுக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் மதுவிலக்கு கொள்கை அந்த கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பை அதிகரித்திருப்பதாகக் கூறப்படு கிறது. எனினும் சோலார் பேனல் ஊழல் காங்கிரஸுக்கு பெரும் பாதகமாக உள்ளதாக பெரும் பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளில் இடதுசாரி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மார்ஸ் மற்றும் புஷ் ஏஜென்ஸி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT