இந்தியா

பதான் சிறுமிகள் பலாத்காரம்: சிபிஐ-க்கு வழக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசம் பதான் மாவட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

பதான் மாவட்டம், கத்ரா சதாத் கன்ஞ் கிராமத்தைச் சேர்ந்த 14, 15 வயது நிரம்பிய 2 சிறுமிகள் கடந்த மே 27-ம் தேதி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு பரிந்துரைத்தது. அதன்பேரில் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள் ளது. இதுதொடர் பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வியாழக்கிழமை அதிகார பூர்வமாக அறிவிக்கை வெளி யிட்டது. இந்தத் தகவலை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா நிருபர் களிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவுக்கு டி.ஐ.ஜி. அந்தஸ் தில் உள்ள சிபிஐ அதிகாரி தலைமையேற்றுள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வெள்ளிக் கிழமை சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.

மேலும் வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 5 பேரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT