தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 25 லட்சம் பேர் வேலை நிமித்த மாக, பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் வசித்தாலும் இவர் களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சொந்த ஊர்களிலேயே உள்ளன. எனவே நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக லட்சக் கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில், கார்களில் புறப்பட்டுள்ளனர்.
இதனால் பெங்களூருவில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு தர்மபுரி, சேலம் வழியாக காரைக்கால் வரை சென்ற பய ணிகள் ரயிலில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதே போல யஷ்வந்த்ப்பூரில் இருந்து நேற்று மாலை சென்ற நாகப்பட்டினம் ரயிலிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஏறியதால், நூற்றுக் கும் மேற்பட்டோர் நிற்க கூட இடம் கிடைக்காமல் தவித்தனர். மேலும் காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ற பல்வேறு விரைவு ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதுமட்டுமல்லாமல் நேற்று இரவு கோவை, திருச்சி, மயிலா டுதுறை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்ற அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக் கான பயணிகள் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்புவ தால், பலருக்கு ரயில்களில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து சென்னை, சேலம், வேலூர், திரு வண்ணாமலை, திருச்சி, திருநெல் வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு வழக்கமான அளவிலே பேருந்து கள் இயக்கப்பட்டன. இதனால் ஆயிரக் கணக்கானோருக்கு பேருந் துகள் கிடைக்காததால் சாந்தி நகர், கலாசிப்பாளையம், மெஜஸ்டிக், சேட்டிலைட் ஆகிய பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட் டது.
இதனால் பயணிகள் தனியார் பேருந்துகளை தேடிச் சென்றபோது டிக்கெட் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. சேலம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களுக்கு செல்ல ரூ. 500-ல் இருந்து ரூ.1000 வரை கட்டணம் வசூலிக் கப்பட்டது.
இது தொடர்பாக சேலத்துக்கு சென்ற ரமேஷ் கூறும்போது, “பலருக்கு தேர்தலில் வாக்க ளிக்க விருப்பம் இருந்தாலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் கடும் அவ திக்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழக மற்றும் கர்நாடக போக் குவரத்து கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றார்.