இந்தியா

பறவை மோதியதால் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதை அடுத்து அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை மோதியதால் புறப்பட்ட இடத்திலே மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவுசல்ராஜ் சர்மா தரப்பில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 நாட்கள் பயணமாக வாரணாசி வந்திருந்தார். இன்று காலை வாரணாசியில் இருந்து அவர் லக்னோ புறப்பட்டார்.

லக்னோ புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டரில் பறவை மோதியது. இதனால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து அவர் லக்னோவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT