இந்தியா

டீசல் வாகனங்களுக்கான தடையை 11 நகரங்களுக்கு நீட்டிக்க வேண்டாம்: பசுமை தீர்ப்பாயத்துக்கு அரசு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

‘‘டெல்லியில் டீசல் வாகனங்க ளுக்கு விதிக்கப்பட்ட தடையை மற்ற 11 நகரங்களுக்கு நீட்டிக்க வேண்டாம்’’ என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாகனங்களால் காற்றில் மாசு அதிகரிக்கிறது, சுற்றுச்சூழல் பாதிக் கப்படுகிறது, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்க டெல்லியில் ஒற்றை படை பதிவெண் கொண்ட கார்கள் ஒற்றை படை தேதிக ளிலும், இரட்டைப் படை பதிவெண் கொண்ட கார்கள் இரட்டைப் படை தேதி களிலும் இயக்கும் திட்டம் 2 முறை 15 நாட்களுக்கு அமல்படுத்தப் பட்டது.

இதன்மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டாலும், போக்கு வரத்து நெரிசல் குறைந்துள்ள தாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.மே 31-ம் தேதிக்கு பிறகு டெல்லி யில் டீசல் வாகனங்கள் இயக்க கூடாது என்று கெடு விதித்தது.

அத்துடன் லக்னோ, பாட்னா, பெங்களூரு, சென்னை, கொல் கத் தா, மும்பை, புணே, கான்பூர், ஜலந்தர், வாரணாசி, அமிர்தசரஸ் ஆகிய 11 நகரங்களில் வாகனங் களால் ஏற்படும் மாசுப்பாடு குறித்த எல்லா விவரங்களையும் மே 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதுகுறித்த விவரங்களை மாநிலங்கள் அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலருக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று மீண்டும் எச்சரித்துள்ளது. மேலும், டெல்லியில் ஒற்றை படை, இரட்டைப் படை எண் கார்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை மற்ற நக ரங்களுக்கும் விரிவுபடுத்த பசுமை தீர்ப்பாயம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மற்ற 11 நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டாம் என்று மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் கேட்டுக் கொண் டுள்ளது. இதுகுறித்து அமைச்சகம் கூறும்போது, ‘‘மற்ற நகரங்களில் டீசல் வாகனங்களை தடை செய் வதால், உள்ளூர் தொ ழிற்துறை பெரிதும் பாதிப்படையும். அத்துடன் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்’’ என்று தெரிவித்துள்ளது.

டீசல் கார்கள் விற்பனைக்கு கடந்த டிசம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. அதன்பின் கேரளாவிலும் டீசல் கார்களுக்கு தடை கொண்டு வரப்பட்டது. எனினும், அந்த தடையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

‘‘முன்னதாக இந்த தடை இந்தி யாவின் மிக மோசமான விளம்ப ரம்’’ என்று பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜப்பான் சென் றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, டோக்கியோவில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான சுசூகியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘டீசல் வாகனங்களுக்கான தடை தற்காலி கமானது, நிலையற்றது. இதனால் சுசூகி போன்ற மிகப்பெரிய மார்க்கெட் வைத்துள்ள நிறுவனங் களுக்கு இந்தியாவில் பாதிப்பு ஏற்படாது’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT