இந்தியா

3 நாள் பயணமாக ஜெர்மனி, அமீரகம் செல்லும் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி-7 உச்சி மாநாடு ஜெர்மனி தலைமையில், அங்குள்ள ஷ்லாஸ் எல்மா நகரில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி ஜெர்மனி செல்கிறார்.

அங்கு 2 நாட்கள் தங்கும் பிரதமர் மோடி, நாடு திரும்பும் வழியில் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT