இந்தியா

370-வது சட்டப்பிரிவை நீக்க பூரி சங்கராச்சாரியார் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று பூரி கோவர்தன பீடத்தின் சங்கராச்சாரியார் நிசலானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.

பிஹார் மாநிலம், ராஜ்கீருக்கு வந்த பூரி சங்கராச்சாரியார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப்பிரிவு, முதலில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டது. பின்னர், குறிப்பிட்ட சமூகத்தினரின் நலனுக்காக, அந்த சட்டப்பிரிவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த சட்டப்பிரிவை தேச நலன் கருதி ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

SCROLL FOR NEXT