இந்தியா

பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி: சிசிடிவி கேமராவில் பதிவு; ஊராட்சித் தலைவர் கைது

இரா.வினோத்

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட‌ம் கெஸ்ட்டூர் ஊராட்சித் தலைவர் சந்திரஹாசா (30). நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் சந்திரஹாசா, ஊராட்சி அலுவ லகத்தில் உதவியாளராக பணியாற்றும் பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சந்திரஹாசாவை தள்ளிவிட்டு தப்பினார். இந்த சம்பவம் ஊராட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்தக் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காவல் துறை யில் புகார் அளித்தனர். ஆனால், தனக்கு எதிராக புகார் அளித்தால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திரஹாசா மிரட்டி யுள்ளார். மேலும் உடனடியாக வெளியூருக்கு சென்று விடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கெஸ்ட்டூர் போலீஸார் பாதிக்கப்பட்ட பெண் ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரஹாசா தன்னிடம் அத்துமீறி நடந்துக் கொண்டதாகவும், பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார். ஆனால் அச்சம் காரணமாக சந்திரஹாசாவுக்கு எதிராக புகார் அளிக்க மறுத்துவிட்டார். எனினும் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சந்திரஹாசாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கெஸ்ட்டூர் துணை காவல் ஆய்வாளர் வன் ராஜூ கூறும்போது, ‘‘பாதிக்கப் பட்ட பெண்மணி கடந்த 6 ஆண்டுகளாக அங்கு பணி யாற்றுகிறார். கணவரை இழந்த அவரை சந்திரஹாசா பலாத்காரம் செய்ய முயன்றது விசாரணையில் உறுதியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவரை ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்''என்றார்.

SCROLL FOR NEXT