தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் நிறை வடைந்தது. இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது தொகுப்பு வாதத்தை தொடங்கி யுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜெயலலிதா உள்ளிட்ட நால் வரின் சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கு நடைபெறுகிறது.
சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே நேற்று தனது இறுதி வாதத்தை முன்வைத்தார்.
அப்போது, “இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. கர்நாடக அரசின் வாதத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நால்வருக் கும் தண்டனை விதித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் தீர்ப்பும், அவரது முடிவுகளும் பல் வேறு குறைபாடுகளை கொண் டுள்ளன.
மேல்முறையீட்டில் கர்நாடக அரசின் இறுதிவாதம் குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ள தகவல்களுக்கு முரணாக இருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தொடுக்கப்பட் டுள்ள இந்த வழக்கில் இருந்து ஜெய லலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவிக்க வேண்டும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்''எனக் கூறி இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.
இவ்வழக்கில், கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பு இறுதி வாதம் நிறை வடைந்துள்ளது. நீதிபதி பினாகி சந்திரகோஷ், “ஜெயலலிதா தரப் பில் முன்வைக்கப்பட்ட கேள்வி களுக்கு கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா பதில் அளிக்க விரும்புகிறீர்களா? ''எனக் கேட்டார். இதையடுத்து ஆச்சார்யா தனது இறுதி தொகுப்பு வாதத்தை தொடங்கினார்.
அதில், '' ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதம் முற்றிலும் தவறானது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கர்நாடக அரசு இவ்வழக்கை தக்க ஆதாரங்கள், சாட்சிகள், அரசு சான்று ஆவணங்கள் ஆகியவற்றுடன் தொடுத்துள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்த பிறகே நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது''என்றார்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.