ரயில்களின் வேகத்தை அதிகப் படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாக, ஸ்பெயின் நிறுவனத்தின் டால்கோ ரயில் சோதனை ஓட்டம், உத்தரப்பிரதேச மாநில பரேலி - மொராதாபாத் இடையே நேற்று நடத்தப்பட்டது.
9 பெட்டிகள் கொண்ட டால்கோ ரயில் நேற்று காலை 9.05-க்கு பரேலியில் இருந்து புறப்பட்டது. 4,500 ஹெச்.பி திறன் கொண்ட டீசல் இயந்திரம் ரயில்பெட்டிகளை இழுத்துக்கொண்டு, மணிக்கு 80 முதல் 115 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, பகல் 10.15 மணிக்கு மொராதாபாத் சென்றடைந்தது.
சோதனை ஓட்டம் நடைபெற்ற தொலைவு மொத்தம், 90 கிலோமீட்டர். தற்போது டெல்லி-மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்கிறது. இதை ஒப்பிடும்போது, டால்கோ ரயில் கூடுதல் வேகத்தில் செல்வ தோடு, 30 சதவீதம் எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தியது.
நேற்று சோதனை ஓட்டத்தின் போது, அதிகாரிகளுடன், மணல் மூட்டைகளும் ரயில்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர காலி பெட்டிகளுடனும் தனியாக சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பரேலி-மொராதாபாத் தடத்தை அடுத்து, மதுரா-பால்வால் இடையே மணிக்கு, 180 கிலோமீட்டர் வேகத் தில் 40 நாட்களுக்கு சோதனை ஓட் டம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்றாவதாக, டெல்லி-மும்பை இடையே 2 வாரங் களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப் படும்.
புல்லட் ரயில் கனவை நனவாக்கு வதற்கு தற்போதுள்ள ரயில் தடங் களில் கூடுதல் வசதிகளை செய்தாக வேண்டும் என, ஜப்பான் நிறுவனம் கூறியுள்ள நிலையில், எந்த மேம் படுத்தலும் இல்லாமல் மணிக்கு, 160 கிலோமீட்டர் வேகம் செல்லும் டால்கோ ரயில்களை வழங்க, ஸ்பெயின் நிறுவனம் முன்வந்தது.
இதை சோதித்துப் பார்க்கும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்தால், பல்வேறு தடங்களில் டால்கோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. டால்கோ ரயில் பெட்டிகள் லேசான எடையுடன் இருப்பதால். வளைவுகளில் ரயிலின் வேகத்தை குறைக்காமல் திரும்புவதால் பயண நேரம் குறையும்.
டால்கோ ரயிலில், 2 பெட்டி கள் எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ், 4 பெட்டிகள் சாதாரண இருக்கைகள் கொண்டதாகவும், உணவு தயாரிப் புக்கு ஒரு பெட்டி மற்றும் முன்னும், பின்னும் தலா ஒரு பெட்டிகள் என, மொத்தம், 9 பெட்டிகள் உள்ளன.