இந்தியா

‘பிரியங்கா சலுகைகள் வாபஸ் இல்லை’

செய்திப்பிரிவு

விமான நிலையங்களில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகளில் இருந்து விலக்கு அளித்து பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகையை திரும்பப் பெறும் திட்டமில்லை என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “அச்சுறுத்தலின் அடிப்படையில் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சோனியா காந்தியின் குடும்பம் தொடர்ந்து அதிகபட்ச அச்சுறுத்தலில் இருந்து வருகிறது. இதுபோன்றவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பாதுகாப்பு அமைப்புகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன. இவற்றை சட்டென மாற்றிவிட முடியாது. பிரியங்கா தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் பயணம் செய்யும்போது, இருவருக்கும் விமான நிலைய சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதேநேரம் வதேரா தனியாகப் பயணம் செய்யும்போது இந்த விலக்கு அளிக்கப்படாது” என்றார்.

SCROLL FOR NEXT