இந்தியா

ராகுல் காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரப் பயணம் திடீர் ரத்து

பிடிஐ

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையான காய்ச்சலில் அவதிப்படும் காரணமாக தமிழகம், கேரளா மாநிலங்களில் தான் மேற்கொள்ளவிருந்த தேர்தல் சுற்றுப் பயணங்களை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில், "துரதிர்ஷ்டவசமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் எனக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் 10,11 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பிரச்சார பயணம் ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநில மக்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

கொலை மிரட்டல்:

முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்மக் கடிதம் வந்தது. இதையடுத்து ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் முறையிட்டனர்.

SCROLL FOR NEXT