இந்தியா

ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதிய செல்போன் செயலி: விரைவில் அறிமுகம் செய்கிறது மத்திய அரசு

பிடிஐ

பயிற்சி மையங்களின் ஆதிக்கத் தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்காக புதிய செல்போன் செயலியை (ஆப்) அறிமுகம் செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழ கங்கள் கூட்டமைப்பு சார்பில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில் கல்வி வணிகமயமாகி வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற் கான நுழைவுத் தேர்வுக்கு தயாரா வதற்கு மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டி உள்ளது. இது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகப்பெரிய சுமையாக உள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘ஐஐடி-பால்’ என்ற இணையதளத்தையும் செல் போன் செயலியையும் விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்ற ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் கேட்கப் பட்ட வினாத்தாள்கள் இலவசமாக வெளியிடப்படும். மேலும் ஐஐடி உள்ளிட்ட முன்னணி பேராசிரியர் களின் உரைகளும் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த தகவல்கள் 13 மொழிகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் இனி நுழைவுத் தேர்வுக் கான வினாத்தாள்கள் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.

SCROLL FOR NEXT