ரொட்டி வகைகளில் புற்று நோய்க்கு காரணமான ரசாயனப் பொருள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இதுபற்றி விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சிஎஸ்இ) மாசு கண்காணிப்பு ஆய்வகம் இது தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த மையத்தின் துணை இயக்குநர் சந்திர பூஷண் கூறியதாவது:
டெல்லியில் உள்ள பிரபல துரித உணவகங்களில் விற்பனை செய் யப்படும் பேக்கிங் செய்யப்பட்ட ரொட்டி, பாவ் மற்றும் பன்கள், பர்கர் ரொட்டி மற்றும் பிஸா ரொட்டி கள் உட்பட 38 வகையான உணவுப் பொருட்களின் மாதிரி களை எடுத்து ஆய்வு செய்தோம்.
இதில் 84 சதவீத மாதிரிகளில் பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகிய ரசாயனப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. எங்கள் ஆய்வகம் மட்டுமல்லாது வெளி ஆய்வகத்தி லும் பரிசோதனை செய்த பிறகே இந்த அறிக்கையை வெளியிடு கிறோம்.
இந்த இரண்டு பொருட்களும் உடல்நலனுக்கு கேடு (புற்று நோய், தைராய்டு) விளைவிப் பவை என்பதால் பல நாடுகள் இவற்றுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் இவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை.
எனவே, பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசி யம் அயோடேட் ஆகியவற்றை உணவுப் பொருட்களில் சேர்ப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று உணவுப்பொ ருள் கட்டுப்பாட்டு அமைப்பை (எப்எஸ்எஸ்ஏஐ) வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகை யில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறும் போது, “சிஎஸ்இ அறிக்கை பற்றி கேள்விப்பட்டேன். இந்த விவகாரம் குறித்து விசாரித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து பதற்றம் அடையத் தேவையில்லை. விரைவில் விசா ரணை அறிக்கையை வெளியிடு வோம்” என்றார்.