வணிக வரித்துறை அதிகாரியைக் கண்டித்து திருப்பதியில் நேற்று நடந்த கடை அடைப்பு போராட்டத் தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சம்மந் தப்பட்ட அதிகாரியை விடுப்பில் அனுப்பியதால்3 நாட்கள் நடைபெற இருந்தபோராட்டம் நேற்றுடன் கைவிடப்பட்டது.
திருப்பதியில்வணிக வரித்துறை அதிகாரியாக பணியாற்றும் ஸ்ரீநிவாசுலு, உரிமம் பெற்ற கடை களுக்கும் அதிக வரி செலுத்துமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
இதன்படி நேற்று காலை முதல் மாலை வரை ஓட்டல்கள், கடைகள், காய்கறி மார்கெட், வணிக வளா கங்கள், பெட்ரோல் பங்குகள் மூடப் பட்டன. இதனால் உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி திருப்பதிக்கு வந்த பல வெளியூர் பக்தர்களும் மிகவும் அவதிப்பட்டனர். திறந்திருந்த சில கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்பட்டன.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட வணிக வரித் துறை அதிகாரி ஸ்ரீநிவாசுலு ஒரு வாரம்கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதனால் போராட்டத்தை தற்காலிக மாக கைவிடுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.