கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் 20 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கும் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு தர வேண்டும் என கடந்த 2010-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 2014-ல் கேரளாவில் நடந்த நாடாளு மன்ற தேர்தலில் வாக்களிக்க 96.5 சதவீத வெளிநாடு வாழ் கேரள மக்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது நடக்க வுள்ள தேர்தலில் துபாய் உள்பட அரபு நாடுகளில் வசிக்கும் ஒட்டு மொத்த கேரளத்தவர்களும் தங்களது பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள் ளனர். மேலும் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு திரும்பவும் ஆயத்தமாகி வருகின்றனர். இதன் மூலம் கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் கேரள மக்கள் வாக்காளர் பட்டியலில் நூறு சதவீத பெயர்கள் இடம்பெறக்கூடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரி கூறும்போது, ‘‘ஏப்ரல் 25-ம் தேதி வரை மொத்தம் 22,933 பேர் வாக்களிக்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 21,323 பேரும், பெண் வாக்காளர்கள் 1,610 பேரும் உள்ளனர். இறுதி பட்டியல் வெளியாகும் முன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பு சார்பில் வாக்களிப்ப தற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்ததன் காரணமாகவே இந்த அளவுக்கு வாக்களிக்க அவர்கள் முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைப்பை நடத்தி வரும் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் தலைவர் அன்வர் நாஹா கூறும்போது, ‘‘எங்களது அமைப்பில் 250க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் கேரளத்தவர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்கள் கேரளா வந்து வாக்களிக்க வசதியாக விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். வரும் மே 14-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் எங்களது முதல் குழுவினர் கேரளாவுக்கு வருகின்றனர்’’ என்றார்.
இதே போல் கத்தாரில் இருந்தும் 1,500 கேரளத்தவர்கள் தேர்தலுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.