திருமலை: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்றுகடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்ஒய்.வி. சுப்பா ரெட்டி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
சுற்றுச்சூழலை பேணிக் காப்பதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எப்போதுமே முன்னிலை வகித்து வருகிறது. அலிபிரி முதல் திருமலை வரை கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை அமலுக்கு வந்துள்ளது. கடைகள், ஓட்டல்கள், தேவஸ் தான அலுவலகங்கள், சோதனைச் சாவடிகள் போன்ற அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட் கள் உபயோகிப்பதில்லை. பக்தர் களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
மேலும், சுற்றுச்சூழலை பாது காக்க விரைவில் திருப்பதி - திருமலை இடையே 100 பேட்டரி அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக திருமலையில் ‘சார்ஜிங் பாயிண்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி பிரசாதம்விநியோக பைகளும் சணல் அல்லது பயோ பைகளை மட்டுமேதேவஸ்தானம் உபயோகப்படுத்து கிறது. சுவாமியின் நைவேத்தியத் துக்கு இயற்கை உரத்தில் தயாரிக்கப் பட்ட தானியங்கள் தான் உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாம் மனித இனத்தை பாதுகாக்க இயலும். இதனை அனைவரும் உணர வேண்டும். ஏழுமலையானின் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், நம் மண், நீர், மற்றும் காற்று ஆகியவற்றை காப்போம் என்றும், பூமி வெப்ப மாகுதலை தடுத்து வரும் தலைமுறைகள் செழித்து வளர உதவுவோம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறினார்.