ஜார்க்கண்ட் மாநிலத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தி தொலைக்காட்சி சேனல் நிருபர் அகிலேஷ் பிரதாப் சிங்கின் குடும்பத்துக்கு, ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என மாநில முதல்வர் ரகுவர்தாஸ் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டம், திவாரியா பகுதியில் கடந்த 12-ம் தேதி இரவு மர்ம நபர்களால் அகிலேஷ் கொல்லப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் டிஜிபி டி.கே.பாண்டேவுக்கு ரகுவர்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.