இந்தியா

பாஜக கூட்டணி 2-ம் ஆண்டு நிறைவு விழாவில் பெண் கல்விக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அமிதாப்

பிடிஐ

மத்திய அரசு சார்பில் டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழாவில், பெண் கல்வி தொடர்பான ஒரு சிறிய பகுதியை தொகுத்து வழங்குவதாக நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, டெல்லியில் இன்று சிறப்பு நிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் வகை யில் நிகழ்ச்சி அமைக்கப்பட் டுள்ளது.

டெல்லி இந்தியா கேட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்குவதாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறும் பாஜக, ‘பனாமா பேப்பர்ஸ்’ பட்டியலில் இடம் பெற்ற அமிதாப்பச்சனை வைத்து சாதனை நிகழ்ச்சி நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதனை மறுத்துள்ள அமிதாப் பச்சன், பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் சிறிய நிகழ்ச்சி ஒன்றை மட்டுமே தான் நடத்துவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகை யில், ‘‘பேட்டி பச்சாவோ, பேட்டி பத்தாவோ’ என்ற தலைப்பில் ஒரு சிறிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவே எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஒட்டுமொத்த நிகழ்ச்சியை மாதவன் தொகுத்து வழங்குகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பெண் குழந்தைகள் திட்டத்தின் தூதராக நான் செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில், நான் பேச உள்ளேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT