இந்தியா

தாவூத் இப்ராஹிம் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில், தலைமறைவாக இருக்கும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது கையாள் சோட்டா ஷகீல் மற்றும் 3 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கும்படி போலீஸாருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எஸ். ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் தவிர, பாகிஸ்தானில் வசிக்கும் ஜாவேத் சுதானி, சல்மான் என்கிற மாஸ்டர், எடேஷாம் ஆகிய மூவரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இந்த மூவரும் தாவூதின் கூட்டாளிகள்.

SCROLL FOR NEXT