இந்தியா

மேற்குவங்க இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு

செய்திப்பிரிவு

மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் பிரச் சாரம் நேற்று மாலையுடன் நிறை வடைந்தது.

மேற்குவங்கத்தில் மொத்த முள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவுப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இறுதிக் கட்டமாக கூச்பிஹார், கிழக்கு மிதினாபூர் மாவட்டங் களைச் சேர்ந்த 25 தொகுதிகளுக்கு வரும் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 18 பெண்கள் உட்பட 170 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர். 58 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள் ளனர்.

மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 6774 வாக்குச் சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. மேற்கு மிதினா பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளின் வசதிக்காக 4000 வாக்குச் சாவடிகளில் தலா ஒரு வீல் சேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் குப்தாவுடன் மத்திய தேர்தல் அதிகாரிகள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். அதன்படி இறுதிக் கட்ட தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை நடந்த 5 கட்ட தேர்தல்களில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடைசி கட்ட தேர்தலிலும் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT