இந்தியா

முக்கிய கோப்புகளுடன் தலைமறைவான உள்துறை அமைச்சக அதிகாரி கைது

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள மத்திய உள் துறை அலுவலகத்தில் செயலாளர் பதவி வகித்து வருபவர்ஆனந்த் ஜோஷி. சமூக ஆர்வலர் டீஸ்டா செடால்வட் வெளிநாட்டு நிதி முறை கேடுகளில் ஈடுபட்டது தொடர்பான வழக்கின் முக்கிய ஆவணங்கள், இவர் பணியாற்றும் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் வைக் கப்பட்டிருந்தது.

ஜோஷி தனது பதவியை பயன் படுத்தி அந்த ஆவணங்களை எடுத்துச் சென்று தலைமறைவா னார். இதையடுத்து கடந்த 10-ம் தேதி முதல் அவரை தீவிரமாக தேடி வந்த சிபிஐ அதிகாரிகள் மேற்கு டெல்லியில் உள்ள உற வினர் வீட்டில் பதுங்கி இருந்த போது நேற்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இது குறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா வைச் சேர்ந்த போர்டு அறக் கட்டளை மத்திய அரசின் கண் காணிப்பு பட்டியலில் இருந்து அதன் பெயரை நீக்கி கொடுத்தால் ரூ.250 கோடி லஞ்சம் வழங்கு வதாக எனக்கு ஆசை காட்டியது’’ என்றார்.

SCROLL FOR NEXT