இந்தியா

2 ஆண்டு சாதனையை விளக்க மத்திய அரசு முடிவு

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை நாடு முழுவதும் விளக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று, வரும் 26-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி வரும் 26-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை ‘விகாஸ் பர்வ்’ என்ற 21 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு மத்திய அமைச்சர், மத்திய இணை யமைச்சர் இடம்பெற்ற 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தனித்தனியாக பிரிந்து நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 200 முக்கிய மையங்களுக்கு சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கவுள்ளனர்.

இது குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், ‘‘நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறை வேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருவதையும், குறுகிய காலத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர பல்வேறு ‘டிவி’க்கள் மூலமாகவும் சாதனைகளை விளக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT