இந்தியா

திறமைகளை வளர்க்காத பட்டம் எதற்கு?

ஆகார் படேல்

பிரதமர் நரேந்திர மோடி தொலை தூரக் கல்வியில் படித்ததற்கான பட்ட சான்றிதழை வழங்குமாறு, குஜராத் பல்கலைக் கழகத்தைக் கேட்டுள்ளனர். அதே போல் என்னுடைய டிப்ளமோ சான்றிதழையும் அவர்கள் தேடித் தருவார்கள் என்று நினைக்கிறேன். கடந்த 1987 - 89 வரை 2 ஆண்டுகள் பரோடா எம்எஸ் பல்கலை.யில் நான் டிப்ளமோ படித்தேன். இறுதி தேர்வு எழுதிய பின்னர் டிப்ளமோ சான்றிதழை பெறாமல் விட்டுவிட்டேன்.

அதைப் பற்றி கவலைப்பட வில்லை. ஏனெனில், அந்தப் படிப்பு படித்ததால் 2 ஆண்டு வீணானது. அதனால் எந்த பலனும் இல்லை. ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட்டில் பணிபுரியும் பொருளாதார நிபுணர் லான்ட் பிரிட்செட், இந்திய கல்வி முறையைப் பற்றி கடந்த 2011-ம் ஆண்டு கருத்து தெரிவித்துள்ளார். ‘‘இந்தியாவில் மேல்தட்டு மக்கள் உண்மையில் நல்ல கல்வியை பெறுகின்றனர். 15 ஆண்டுகள் குழந் தைகளை தயார்படுத்தும் நாடு களில் மிகச்சிறந்த முதல் 10 சதவீதத் தினரில் இந்தியர்களும் இருக் கின்றனர். சுமாராக ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை தயார் படுத்துகின்றனர். அதேபோல் லட்சக்கணக்கான மாணவர்கள் எந்த திறனும் இல்லாமல் படித்து வெளியில் வருகின்றனர் என்பதை நம்ப தயங்குகின்றனர்’’

இதற்கு முதல் காரணம், இந்தியாவின் தொடக்க கல்வி முறையில் உள்ள தரம் என்கிறார் பிரிட்செட். நமது பள்ளி மாணவர் களின் படிக்கும் திறன், கணக்கிடும் தரம் ஆகியவை பற்றி போதிய அளவுக்கு ஏராளமான ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டாவது காரணம் உயர்க் கல்வியின் தரம். குறிப்பாக சிறப்பு பிரிவுகளில் உயர்க் கல்வியின் தரம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசோசம் வெளியிட்ட ஆய்வில், ‘‘இந்தியாவில் எம்பிஏ படித்தவர் களில் 7 சதவீதம் பேர்தான் வேலை வாய்ப்புக்கு தகுதியுள்ளவர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதே நிலைதான் ஐ.டி. துறை யிலும் காணப்படுகிறது. ‘‘90 சதவீத பட்டதாரிகள், 75 சதவீத இன்ஜினீ யர்களுக்கு பயிற்சி பெறுவதற்கான திறன் இல்லை’’ என்று நேஷனல் அசோசியேஷன் ஆப் சாப்ட்வேர் அண்ட் சர்வீசஸ் கம்பெனி (நாஸ்காம்) கூறுகிறது.

நமது கல்வி நிறுவனங்கள் வேலைக்கு தகுதியில்லாத இந்தியர்களைத்தான் உருவாக்கி கொண்டிருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மிகச்சிறந்த செயல் திட்டம் என்றால், விவசாய வேலை களில் இருந்து தொழிற்சாலை களில் பயிற்சி பெறுவதற்கு ஆட்களை அனுப்ப வேண்டியது தான் நமக்கு மிக அவசியம். இதை கல்லூரி அளவில் பாலிடெக்னிக்கு கள் செய்தன.

பாலிடெக்னிக்கில் நான் டெக்ஸ் டைல் டெக்னாலஜி டிப்ளமோ படித்தேன். அங்கு நூல் திரித்தல், நூற்றல், நெசவு, துணி தயாரித்தல் போன்ற எல்லா விஷயங்களையும் கற்று தரவேண்டும்.

எங்களில் பெரும்பாலானோர் 16, 17 வயதில் பத்தாம் வகுப்பை முடித்து விட்டு, சரியாக படிக்காமல் அல்லது எந்த லட்சியமும் இல்லா மல் மேற்கொண்டு படிக்க விரும்பியவர்கள். பள்ளி படிப்பை முடித்த சிலர் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் பாலிடெக்னிக்கு களில் சேர்ந்தனர். ஆர்வத்துடன் சேர்ந்தவர்கள் இல்லை. இதுதான் 2 ஆண்டு பாலிடெக்னிக் படித்த போது கிடைத்த அனுபவம்.

நாங்கள் பயிற்சி பெற்ற பாலி டெக்னிக்கில் இருந்த இயந்திரங்கள் ஒன்று கூட சரியாக இல்லை. இயந்திரங்களை நாங்கள் பார்க்க லாம். அவற்றை ‘ஆன்’ செய்ய முடியாது. தொழிலாளர்கள் போல் எங்களால் அந்த இயந்திரங்களை இயக்கி பயிற்சி பெற முடியாது.

இயந்திரங்களை இயக்கி பயிற்சி பெறாமலே எங்களுக்கு வாய்மொழி தேர்வு எல்லாம் நடந்தது. பாலிடெக்னிக்கில் படித்தவர்கள் யாரும் ‘போர்மேன்’ வேலைக்கு செல்லவில்லை. எங்கள் குடும்பம் நடத்தி வந்த டெக்ஸ்டைல் வர்த்தகத்தில் நான் சேர்ந்தேன். ஆனால், பாலியஸ்டர் நெசவு எல்லாம் ஜீரோவில் இருந்து தான் நான் அங்கு கற்று கொள்ள தொடங்கினேன்.

இப்போது பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எனக்கு டிப்ளமோ சான்றிதழ் கிடைத்தால், அதை ‘பிரேம்’ போட்டு வீட்டில் மாட்டி வைப்பேன். அந்த 2 ஆண்டு காலம் எப்படி வீணாக கழிந்தது என்பதை எனக்கு நினைவூட்டுவதற்கு அது உதவும். தவிர வேறு எதற்கும் அந்த சான்றிதழ் பயன்படாது.

SCROLL FOR NEXT