மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி வரும் 27-ம் தேதி 2-வது முறையாக பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடி, சோனியா மற்றும் வங்கதேச, பூட்டான் பிரதமர்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து வரும் 27-ம் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி வரும் 27-ம் தேதி 2-வது முறையாக பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்கும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே, உத்த ரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகி யோருக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்க வசதியாக இந்த முறை ஆளுநர் மாளிகைக்கு பதிலாக கொல்கத்தாவில் உள்ள ரெட்ரோடு சாலையில் விழா நடக்கிறது.