இந்தியா

விமான கழிப்பறையில் மறைக்கப்பட்ட 1 கிலோ தங்கம்

பிடிஐ

துபாயில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் கொச்சிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வருவதையும் அவர் கழிப்பறையை பயன்படுத்தும்போது சத்தம் வருவதையும் விமான ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தலைமை ஊழியர் கழிப்பறைக்கு சென்று சோதித்தார். அப்போது 1 கிலோ தங்கக் கட்டிகள் பேப்பரில் சுற்றப் பட்டு, கழிப்பறையில் டிஷ்யூ பேப்பர் அலமாறிக்கு பின் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஊழியர் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தங்கக் கட்டிகளை அவர்களிடம் ஒப்படைத்தார்.

பயணத்தின்போதும், விமானம் தரையிறங்கிய பிறகும் குறிப்பிட்ட பயணியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததாக விமான ஊழியர்கள் கூறினர்.

இதையடுத்து அந்தப் பயணியை பிடித்து சுங்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT