டெல்லியில் வாகனக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நாட்களில் முந்தைய சோதனை காலத்தை விட, 2-வது முறையில் கூடுதலாக 4 லட்சம் கார்கள் சாலையில் சென்றது ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, தலா 15 நாட்கள் அடிப்படையில் சோதனை முறையில் வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. இதனால் காற்று மாசில் பெரிய அளவு தாக்கம் தெரியவில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசல் குறைந்திருந்தது.
இந்த சோதனை முறை குறித்து டெல்லி போக்குவரத்து சிறப்பு ஆணையர் கே.கே.தஹியா தலைமையிலான ஆறு அதிகாரிகள் கொண்ட குழு மாநில அரசிடம் நேற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
“ஏப்ரல் 15 முதல் 30-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் 2-வது முறையாக வாகனக் கட்டுப்பாடு அமல்செய்யப்பட்டது. முதல் சோதனை முறையை விட 2-வது முறையில் 3,88,886 கார்கள் மற்றும் 1,34,598 இருசக்கர வாகனங்கள் சாலைகளில் அதிகரித்திருந்தன. கார் உரிமையாளர்கள் பலர் புதி தாக இருசக்கர வாகனங்கள் வாங்கி யுள்ளனர். சுற்றுப்பகுதிகளிலிருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங் கள் எண்ணிக்கை 2-வது முறையில் 12 சதவிகிதம் குறைந்திருந்தது.
பள்ளி வாகனங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. விலக்கு பெற்ற சி.என்.ஜியால் ஓடும் புதிய வாகனங் களும் சுமார் 30,000 உயர்ந்துள்ளன. இதுபோன்ற விஷயங்களால், முதல் முறையை விட 2-வது சோதனை முறையில் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையிலான வாகனக்கட்டுப்பாட்டு நடைமுறை யின் வெற்றியைப் பொறுத்து, நிரந்தரமாக அமல்படுத்தப்படும் என முதல்வர் கேஜ்ரிவால் அறி வித்திருந்தார். ஆய்வறிக்கையை மீதான ஆலோசனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக் கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.