இந்தியா

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி: உம்மன் சாண்டி கடும் ஏமாற்றம்

பிடிஐ

கேரள சட்டப்பேரவைக்கான 140 தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட 129 தொகுதி முடிவுகளில் 85-ல் வென்றுள்ளது இடது ஜனநாயக முன்னணி. காங்கிரஸ் 46 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 8 தொகுதிகளுக்கான முடிவுகள் இனி வெளிவரும்.

இதனையடுத்து இடது ஜனநாயக முன்னணி அங்கு ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் குறித்து தற்போதைய முதல்வர் உம்மன் சாண்டி கூறும்போது, “இது எதிர்பாராத தோல்வி, காங்கிரஸ் தலைமை ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த தேர்தல் முடிவுகள் பின்னடைவே” என்றார்.

மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமாக ஓ.ராஜகோபால் நேமம் தொகுதியில் சிபிஎம்-எல்டிஎப் எம்.எல்.ஏ. வி.சிவக்குட்டி என்பவரை 8,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் முதன் முதலாக கேரள சட்டப்பேரவைக்கு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் செல்கிறார்.

ஆனால் பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், முன்னாள் தலைவர் வி.முரளிதரன், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் மூத்த தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் தோல்வி தழுவினர்.

இடது ஜனநாயக முன்னணியின் முதல்வர் வேட்பாளர்களான பினாராயி விஜயன் மற்றும் 93-வயது வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் முறையே தர்மதம் மற்றும் மலப்புழா தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தொழிற்துறை அமைச்சர் பி.கே.குனாலிக்குட்டி, வருவாய் அமைச்சர் அடூர் பிரகாஷ், உணவு அமைச்சர் அனூப் ஜேகப், சமூக நல அமைச்சர் முன்னேர், முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சுங்கத்துறை அமைச்சர் கே.பாபு, தொழிலாளர் அமைச்சர் ஷிபு பாபு ஜான், வேளான் அமைச்சர் கே.பி.மோகனன், பி.கே.ஜெயலஷ்மி, மற்றும் காங்கிரஸ் முக்கிய வேட்பாளர் கே.சுதாகரன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

சபாநாயகர் என்.ஷாக்தன், மற்றும் துணைச் சபா நாயகர் பாலோடு ரவி ஆகியோரும் தோல்வி தழுவினர்.

இடது ஜனநாயக முன்னணியில் செபாஸ்டியன் பால், நிகேஷ் குமார் ஆகிய முக்கிய வேட்பாளர்களும் தோல்வி தழுவினார்.

SCROLL FOR NEXT