பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்ற ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்துக்காக 26 மாநிலங்களில் சுமார் 2,508 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதாவது நகர்ப்புற ஏழைமக்களுக்கான இந்த மலிவு விலை வீட்டுத் திட்டம் பற்றி இன்று நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இது குறித்து மத்திய நகர்ப்புற அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் கூறியதாவது:
ஏப்ரல் 25, 2016 நிலவரப்படி 26 மாநிலங்களில் 2,508 வீடுகள் பிரதமரின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிலநடுக்கங்கள், வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் விதத்தில் இந்த வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் சுமார் 2 கோடி வீடுகள் கட்டப்படுகின்றன. அதாவது 7 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2022-ல் முடிவடையும். நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த ஊதியப் பிரிவினர் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற மக்களில் வீடற்றோருக்கு வீடு வழங்குவது மாநில அரசின் முதன்மை பொறுப்பாகும். மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவும் விதமாக, மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம், ‘நகர்ப்புற வீடட்டோருக்கு புகலிடம்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
இது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள தகவல்களின் படி இதுவரை 770 புகலிடங்கள் மாநிலங்களினால் வழங்கப்பட்டுள்ளது, இதில் 38,770 பேர் வசிக்கலாம். இடில் 270 புகலிடங்களில் 11,900 பேர் ஏற்கெனவே வசித்து வருகின்றனர்.